பொலிஸாரின் செயற்பாட்டால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட இன மோதல்!

Published By: Vishnu

21 Mar, 2019 | 07:39 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

பாணந்துறை - சரிக்கமுல்ல - திக்கல பகுதியில் இரண்டு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலை அடுத்து, அந்த பகுதியில் இன மோதல் ஒன்று ஏற்படும் அச்சம் ஏற்பட்டது. 

எனினும்  இதன்போது சிறப்பாக செயற்பட்ட பொலிஸார் மற்றும் பொலிஸ் விஷேட அதிரடிப் படையினரை ஸ்தலத்துக்கு வரவழைத்து நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

இதையடுத்தே தற்போது அங்கு சுமுகமான சூழல் ஒன்று நிலவுவுகின்றது.  

இந் நிலையில் பிரதேசத்தின் பாதுகாப்பை மேலும் உறுதி செய்ய தேவையான பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளதாகவும்,  துரதிஷ்டவசமான மோதல் சம்பவம் ஒன்றைத் தவிர வேறு எந்த சம்பவங்களும் அங்கு பதிவாகவில்லை எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

பாணந்துறை பகுதியில் நேற்றிரவு இரண்டு குழுக்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டிருந் நிலையில், பெரும்பான்மை இளைஞர் ஒருவரும் முஸ்லிம் இளைஞர்கள் இருவருமாக மொத்தமாக  மூவர் சிறு காயங்களுக்கு உள்ளாகினர்.

இதையடுத்து அவர்கள் பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இச் சம்பவம் தொடர்பில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்ததுடன் இந்த  மோதல் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் பலரை தேடி வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59