பிரின்ஸ் ஒப் வோல்ஸ் கல்லூரயின் மாணவர் ஒருவர் திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொரட்டுவ பிரின்ஸ் ஒப் வோல்ஸ் கல்லூரயில் கல்வி கற்கும் 18 வயதான மாணவர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த மாணவர் காற்பந்து விளையாட்டின் போது ஏற்பட்ட திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் மொரட்டுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.