(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்)

மல்வத்து மகா நாயக்க பீடத்தின் உயரிய விருதான சாசன கீர்த்தி தேசபிமானி விருது  சபாநாயகர் கரு  ஜெயசூரியவுக்கு   வழங்கப்பட்டதற்கு பாராளுமன்றத்தில் இன்று ஆளும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தமது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் சபாநாயகருக்கு தெரித்தனர். 

பாராளுமன்றம் இன்று காலை 9.30 மணிக்கு சபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமையில் கூடியது. இதனையடுத்து இடம்பெற்ற தினப்பணிகளைத் தொடர்ந்தே சபாநாயகருக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் தெரிவிக்கப்பட்டன. 

அனைவரினதும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் ஏற்றுக்கொண்ட சபாநாயகர் அனைத்துக்கட்சி உறுப்பினர்களினதும் இந்த வாழ்த்துக்கள், பாராட்டுக்கள் தனக்கு இன்னும் உத்வேகத்தையும் பலத்தையும் வழங்குவதாகக்கூறி நன்றிகளைத்  தெரிவித்துக்கொண்டார்.