(நா.தனுஜா)

கூட்டணி அமைத்த பின்னரே ஜனாதிபதி வேட்பாளராக யார் களமிங்கப் போகின்றார்கள் என்பது தொடர்பில் இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

எதிர்க்கட்சி தலைவரின் இல்லத்தில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிகளுக்கிடையிலான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

அத்துடன் இன்றைய இருதரப்புப் பேச்சுவார்த்தையில் இரு கட்சிகளுக்கும் பொதுவான கொள்கைத்திட்டமிடல் உருவாக்கம் தொடர்பிலேயே விசேட கவனம் செலுத்தியிருந்தோம். 

அத்துடன் கட்சிகளின் மத்திய செயற்குழுவின் தீர்மானங்களுக்குக் கட்டுப்பட்டு பொருளாதாரம், வெளிவிவகார கொள்கை, விவசாயம், சுகாதாரம் உள்ளிட்ட பிரதான 20 விடயங்கள் குறித்து இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளோம். 

கொள்கை உருவாக்கம் தொடர்பான இணக்கப்பாடு மாத்திரமன்றி, அவற்றை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பது பற்றியும் கலந்துரையாடினோம் என்றார்.