(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்)

அரசாங்கம் திட்டமிட்டமிட்டிருக்கும் சமுர்த்தி நிவாரணம் வழங்குபவர்களில் மலையக மக்களையும் உள்ளடக்க வேண்டும் என விசேட பிரதேசங்கள் அபிவிருத்தி பற்றிய அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் வே. ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

அத்துடன் சிவனொளிபாதமலையின் பெயரை அகற்ற எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கையை அரசாங்கம் தடுத்து நிறுத்தவேண்டும்.

மேலும் எனக்கு வழங்கப்பட்ட அமைச்சுக்கு மேலதிகமாக விசேட பிரதேசங்கள் அபிவிருத்தி பற்றிய அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சு வழங்கப்பட்டிருக்கிறது. இதனூடாக மலையகத்தில் நலிவுற்றிருக்கும் மக்களின் தேவைகளை நிறைவேற்ற இந்த அமைச்சினூடாக முடியுமான நடவடிக்கைகளை மேற்கொள்வேன் என்றார்.