பூர்வீக தேசத்தை அடைவதே திபெத்தியர்களின் கனவு; ஒரு கள ஆய்வு  

Published By: Digital Desk 3

21 Mar, 2019 | 03:35 PM
image

( லியோ நிரோஷ தர்ஷன் )

திபெத் பூமியின் கூரை என்று அழைக்கப்படும் நாடு. பௌத்த சமயம், சீன, இந்தியப் பண்பாடுகள், மேற்கத்திய பண்பாடுகளின் தாக்கங்கள் மற்றும் இஸ்லாமியத் தாக்கங்கள் ஆகியவற்றை உள்வாங்கிய ஒரு தனித்துவம் மிக்க பண்பாடாகும். 

இந்தியாவின் தலைப் பாகமாக இருக்கும் இயமமலைத் தொடரில் திபெத் தேசம் காணப்பட்டதால், அதனை தனதாக்கிக் கொள்வதற்காக சீனா திபெத் மீது மேலாதிக்கத்தை கடுமையாக செலுத்த தொடங்கியது. 

இதனால் ஏற்பட்ட மோதல்களினால் பல்லாயிரம் கணக்கான திபெத்தியர்கள் உயிரிழந்ததுடன் பல்வேறு தேசங்களுக்கு அகதிகளாகவும் சென்றனர்.  அவ்வாறு சென்ற திபெத்தியர்கள் இன்றும் தமது பூர்வீகத்தை இழந்து பல்வேறு தேசங்களில் அகதிகளாக வாழ்கின்றனர் .

நேபாளம் - லலிட்பூரில் அமைந்துள்ள இந்த திபெத்திய முகாமில் சுமார் 10 ஆயிரம் வரையிலான திபெத்தியர்கள் வாழ்கின்றனர். இவர்கள்  1959 மற்றும் 1960 காலப்பகுதியில் திபெத்தில் ஏற்பட்ட கடும் மோதல் காரணமாக தஞ்சமடைந்தவர்கள். 

     

எத்தேசம் சென்றாலும் தமக்குறிய அடையாளத்துடன் திபெத் மக்கள்  வர்கின்றனர். திபெத்திய மத தலைவராகக் கருதப்படும் பாரம்பரிய தலாய் லாமாவை வழிப்படுவதில் ஈடற்ற நம்பிக்கையுடையவர்களாவே இந்த மக்கள் உள்ளனர். திபெத்திய பாரம்பரியங்களை பாதுகாப்பதிலும் தமக்குறிய கைத்தொழில்களை முன்னெடுப்பதிலும் மிகவும் ஆர்வமாக இந்த முகாம் வாழ் திபெத்தியர்கள் உள்ளனர். 

நேபாள அரசாங்கம் இந்த மக்களுக்கு தேவையான கல்வி மற்றும் தொழில்  உள்ளிட்ட வாழ்வியல் உரிமைகளை வழங்கியுள்ளது. திபெத்திய இளைய சமூகத்தினர் நேபாளத்தின் வெளியிடங்களுக்கு சென்று தொழில்  புரிந்தாலும் முதியோர் மற்றும் பெண்கள் முகாமில் பல்வேறு கைத்தொழில்களை ஆர்வமாக செய்து வருகின்றனர். 

குறிப்பாக கம்பளியிலான படுக்கை விரிப்புக்கள் உள்ளிட்ட உற்பத்திகளை இந்த திபெத்திய முகாம் பெண்கள் தமது வாழ்வாதாரத்தை ஈடுசெய்வதற்காக செய்து வருகின்றனர். இந்த உற்பத்திகளுக்கு உள்ளுர் மற்றும் வெளியூர் சந்தைகளில் சிறந்த வரவேற்பு காணப்படுகின்றது. 

அனைத்து கம்பளி உற்பத்திகளுமே திபெத்திய பாராம்பரியத்தை உணர்த்தும் வகையிலான வர்ணங்களில் தயாரிக்கப்பட்டுள்ளதுடன் அதன்  ஓவியங்களும் தனி சிறப்பு மிக்கவையாவே உள்ளது.

புன்னகை நிறைந்த முகத்துடன்   இந்த அகதி முகாமில் வாழும் திபெத்திய முதியோர்கள்  எப்போதும் பாரம்பரிய மத தலைவரான தலாய் லாமாவை வழிபடுவதில் ஆர்வமாக உள்ளனர். இவர்கள் வழிபடுகின்ற முறையும் தலாய் லாமா மீது வைத்துள்ள எல்லையற்ற நம்பிக்கையும் ஆச்சரியமிக்கது. 

எவ்வாறாயினும் அடக்குமுறையினாலான மோதல்களில் பாதிக்கப்பட்டு  இடம்பெயர்ந்து முகாம்களில் வாழும் எத்தேச மக்களானாலும் அவர்களின் ஏக்கமும் எதிர்ப்பார்ப்பும் தமது பூர்வீக தேசமாகும். அதற்கு திபெத்திய அதிகதிகள் மாத்திரம் விதிவிளக்கல்ல. 

இந்த முதியவரின் எதிர்ப்பார்ப்பும் பிரார்தனையும் திபெத் தேசம் மீதான எதிர்பார்ப்பையும் ஏக்கத்தையுமே வெளிப்படுத்துகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04