பொஹவந்தலாவ போஹவான தேயிலை தோட்டத்தில் சட்டவிரோதமான முறையில் இரத்தினக்கல் அகழ்வில் ஈடுபட்ட ஐவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இன்று அதிகாலை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய  தகவலை அடுத்து மேற்கொண்ட  சுற்றிவளைப்பின் போது கைப்பற்றப்பட்டுள்ளதுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள்  பொஹவந்தலாவ பிரேசத்த்தினை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர்கள் ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளனர்.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.