(ஆர்.விதுஷா)

அம்பலாங்கொடை, அக்குரல பகுதியிலுள்ள கடற்பரப்பில் நீரில் மூழ்கி இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று பிற்பகல் 3 மணியளவில் மேற்படி  கடற்பரப்பில் சிலர்   நீராடச் சென்றுள்ளனர். இதன்போதே இவர்களில் இருவர் கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் 66, 17 வயதுடைய அக்குரல கஹாவ மற்றும் கரன்தெனிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஆவார்.

இவர்களின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக பலப்பிட்டிய  வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.