வவுனியா பொலிஸ் நிலைய வளாகத்தில் வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் அனுரா அபேயவிக்கிரம தலைமையில் இன்று காலை 8 மணியளவில் 155ஆவது பொலிஸ் வீரர்கள் தினம் அனுஷ்டிக்கப்பட்டது.
இலங்கைப் பொலிஸாரால் வருடா வருடம் கடைப்பிடிக்கப்பட்டு வரும் குறித்த பொலிஸ் வீரர்கள் தினம் இன்று 155ஆவது தினமாகும். அத்துடன் யுத்தகாலத்தில் உயிர் நீத்த பொலிஸாரையும் இத்தினத்தில் நினைவு கூரப்பட்டு வருகின்றனர்.
வவுனியா பிராந்திய நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பொலிஸ் வீரர்கள் நினைவுத்தூபியில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
சர்வ மதத் தலைவர்கள், உயிரிழந்த பொலிஸாரின் குடும்ப உறுப்பினர்கள், ஓய்வு பெற்ற பொலிஸார், வவுனியா பொலிஸ் அத்தியட்சகர் தென்னக்கோன், வவுனியாப்பிரிவிலுள்ள பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், பொலிஸார் எனப்பலரும் கலந்துகொண்டு உயிர் நீத்த பொலிசாருக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM