கிரிபத்கொடையில் போலி நாணயத்தாள்களை அச்சிட்டு வெளியிட்ட ஐந்து சந்தேக நபர்களை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். 

கிரிபத்கொடை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தவலையடுத்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது 1000 ரூபா நாணயத்தாள்கள் ஐந்து உட்பட 500 ரூபா நாணயத்தாள்கள் மூன்று ஆகியவற்றுடன் சந்தேகநபர்கள் ஐவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். 

குறித்த சந்தேகநபர்களை விசாரித்த போது போலி நாணயத்தாள்கள் அச்சிட்டு வெளியிடும் நபர்களிடமிருந்து பணத்தை பரிமாற்றுவதற்காக பெற்றுக்கொண்டதாக தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில் களனி - திப்பிட்டிகொட பகுதியில் அமைந்துள்ள வீட்டை சுற்றிவளைத்தபோது 1000 ரூபா  போலி நாணயத்தாள்கள் 27 மற்றும் 500 போலி நாணயத்தாள்கள்  நான்கு  ஆகியவற்றுடன் பிரதான சந்தேக நபரை கைதுசெய்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

குறித்த சம்பவத்தில் போலி நாணயத்தாள்களை அச்சிடுவதற்காக பயன்படுத்திய இயந்திரம் மற்றும் கணினிகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். 

குறித்த சந்தேகநபர் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். இந்நிலையில் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.