தலைமன்னார் கடற்பரப்பில் ஒருதொகை பீடி சுற்றும் இலைகளுடன் இருவரை இலங்கை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.

மன்னார் கடற்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தவலை அடுத்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது சந்தேகத்தின் பேரில் இருவரை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களிடமிருந்து 912 கிலோ பீடி சுற்றப்பயன்படும் இலைகளை கடற்படையினர் மீட்டுள்ளனர்.

இதேவேளை, அவர்களிடமிருந்து படகொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.