(எம்.மனோசித்ரா)

சென்னையிலிருந்து இலங்கைக்கு சட்ட விரோதமாக தங்க பிஸ்கட்டுக்களை கொண்டுவர முற்பட்ட மூன்று இலங்கை பிரஜைகள் மற்றும் 6 இந்திய பிரஜைகளை சுங்க அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்.  

இவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட 5.3 கிலோகிரோம் தங்க பிஸ்கட்டுக்களின் பெறுமதி 39 கோடியே 2 இலட்சத்து 47 ஆயிரத்து 810 ரூபா ஆகும்.

கைதுசெய்யப்பட்ட இலங்கை பிரஜைகள் வவுனியா, கண்டி மற்றும் கட்டுகன்னாவை பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும், இந்திய பிரஜைகள் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.