இலங்கையில் பல்வேறு பகுதிகளிலிருந்து கதிர்காமத்திற்கு வருகை தருகின்ற பக்தர்களினதும் காதிர்காமத்தை அண்மித்த பிரதேச மக்களின் குடிநீர் தேவைகளையும் பூர்த்திசெய்யும் முகமாக ஸ்தாபிக்கப்பட்டுள்ள 06 நீர் சுத்திகரிப்பு தொகுதிகளை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு நேற்றும் இன்றும் இடம்பெற்றது.

கதிர்காமத்திற்கு வருகை தருகின்ற பக்தர்களும் பிரதேச மக்களும் நீண்ட காலமாக முகங்கொடுத்து வந்த சுத்தமான குடிநீர் பிரச்சினையை தீர்த்து வைக்கும் முகமாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் பணிப்புரைக்கமைய சிறுநீரக நோய்த்தடுப்பு தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் இந்த நீர் சுத்திகரிப்பு தொகுதிகளை நிர்மாணிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

அண்மையில் கதிர்காமத்திற்கு வழிபாட்டிற்காக சென்ற ஜனாதிபதியிடம் கதிர்காம பெரிய கோவிலின் பதில் கடமை பஸ்நாயக்க நிலமே தில்ருவன் ராஜபக்ஷ இந்த பிரச்சினை தொடர்பான கோரிக்கை முன்வைத்திருந்தார்.

அதற்கமைய கதிர்காம வணக்கஸ்தலமும் அதனை அண்மித்த விகாரைகளையும் பாடசாலைகளையும் மையமாகக்கொண்டு 12 நீர் சுத்திரகரிப்பு தொகுதிகளை நிர்மாணிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், அதில் 06 நீர் சுத்திகரிப்பு தொகுதிகளின் நிர்மாணப் பணிகள் நிறைவு செய்யப்பட்டு இன்று மக்களிடம் கையளிக்கப்பட்டது.