UPDATE : சிவனொளிபாதமலை சம்பவம் ; பொலிஸாரின் விசேட நடவடிக்கை  

Published By: Vishnu

20 Mar, 2019 | 09:42 PM
image

சிவனொளிபாதமலையின் அடிவாரத்தில் மஸ்கெலியா பிரதேச சபையால் வைக்கப்பட்ட பெயர் பலகையை விசமிகள் சிலர் இன்று தார் ஊற்றி சேதம் விளைவித்தமையினால் அப் பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டிருந்தது.

சிவனொளிபாதமலை என மும்மொழியில் எழுதப்பட்டிருந்த பெயர் பலகையில் தமிழ் மற்றும் ஆங்கில மொழி எழுத்துகள் ஸ்ப்ரே செய்து மறைக்கப்பட்டுள்ளன.  

இதனையடுத்து, மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டிரோன் ரத்நாயக்க தலைமையிலான பொலிஸ் குழுவினர் அந்தப் பகுதிக்கு விரைந்துள்ளனர்.

அங்கு ஏற்பட்டிருந்த பதற்ற நிலையை பொலிஸார் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததையடுத்து, பெயர் பலகையை சீரமைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது.

முன்னதாக சிவனொளிபாதமலை என்றிருந்த பெயர்  சிறிபாத என்று மாற்றப்பட்டது.  எனினும் மஸ்கெலியா பிரதேச சபை தீர்மானத்துக்கு அமைய மீண்டும் சிவனொளிபாதமலை என எழுதப்பட்டிருந்தது.

எனினும் இந்த சம்பவத்துடன் தொடா்புடையவா்களை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கைகளை எடுத்தமையால் அங்கு மீண்டும் பதற்ற நிலை உருவாகியிருந்தது. 

சிவனொளிபாதலையில் ஏற்பட்ட பதற்ற நிலையை தொடர்ந்து அட்டன் பொலிஸ் மா அதிபர், மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் நல்லத்தண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோர் இணைந்து பொது கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளனர்.

இக்கூட்டத்தில், இவ்வாறு தவறான விடயத்தில் ஈடுபட்டோரை சி.சி.டி.வி கெமராவின் உதவியுடன் கைது செய்யவுள்ளதாக அறிவித்தனர். அத்துடன் சிவனொலிபாதமலையில் இன மத பேதமின்றி அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:53:53
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமையின் அயற்கிராமங்கள்...

2024-04-20 10:26:06
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நுவரெலியாவில் போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பெண் உட்பட...

2024-04-20 10:43:33
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

அமெரிக்காவில் நடைபெறவுள்ள திருமணமான அழகுராணிகளுக்கான போட்டியில்...

2024-04-20 10:50:13
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28