(ஜெனிவாவிலிருந்து எஸ்.ஸ்ரீகஜன்)

ஜெனிவாவில் இன்று நடைபெற்ற இலங்கை குறித்த அறிக்கை மீதான விவாதத்தில் உரையாற்றிய சர்வதேச நாடுகள் இலங்கையானது ஒரு குறிப்பிட்ட  கால அட்டவணையின் கீழ் பொறுப்புக்கூறல் பொறிமுறையை முன்னெடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை நிலைநாட்டவேண்டும் என்று கோரிக்கை விடுத்தன. 

ஐரோப்பிய ஒன்றியம் பிரிட்டன் கனடான அவுஸ்திரேலியா உள்ளிட்ட அனைத்து நாடுகளும்  இவ்வாறு கால அட்டவணையின் கீழான பொறுப்புக்கூறல் பொறிமுறையையே வலியுறுத்தின. 

ஜெனிவா  மனித உரிமை பேரவையில் இன்றைய தினம் இலங்கை மீதான அறிக்கை  மனித உரிமை ஆணையாளரினால்  சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் விவாதம் நடைபெற்றது. இதில் ஐரோப்பிய ஒன்றியம், டென்மார்க், நோர்வே, பெல்ஜியம், பிரிட்டன் மற்றும் ஜேர்மனி பல நாடுகள் இலங்கை குறித்து  உரையாற்றியமை குறிப்பிடத்தக்கது.