சித்திரை புத்தாண்டு காலப்பகுதியில் பயணிகளின் போக்குவரத்து வசதிக்காக இயக்கப்பட்டிருந்த விசேட பேரூந்து ஒன்றில் அசாதாரணமான முறையில் பயணிகளிடம் இருந்து அதிகமாக கட்டணம் வசூலிக்கப்பட்ட சம்பவம் நடைப்பெற்றுள்ளது.

கண்டி - ஹட்டன் வீதியில் பயணித்த பேரூந்து ஒன்றிலேயே இவ்வாறு அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது. சாதாரணமாக கண்டியிலிருந்து கினிகேத்தனவிற்கு 68 ரூபா அறவிடப்படும் எனினும் இப்பேரூந்து நடத்துனர் 250 ரூபா கேட்டுள்ளமை தெரியவந்துள்ளது.