ஜெனீவா மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பான விவாதம் இடம்பெற்று வருகின்றது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 40 ஆவது மனித உரிமைகள் மாநாட்டின் இன்றைய அமர்வுகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன. 

இலங்கை குறித்து மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் தயாரித்த அறிக்கை, இன்றைய மாநாட்டில் பரிசீலனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் செயற்பாடுகள் தொடர்பில் காலவரையறை அடங்கிய திட்டமொன்றை அமுல்படுத்துமாறு இலங்கையிடம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவையில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.