கொழும்பு - கண்டி பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

அதேவேளை, குறித்த சம்பவத்தில் 6பேர் காயமடைந்த நிலையில் கேகாலை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு - கண்டி வீதியின் கேகாலை, கரடுப்பன பகுதியில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் வண்டியொன்றும் காரொன்றும் வேனொன்றும் மோதியே விபத்து இடம்பெற்றுள்ளது. 

இந்நிலையில் சம்பவத்துடன் தொடர்பில் பஸ் சாரதியை கைதுசெய்துள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.