(எம்.மனோசித்ரா)

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் நாளை வியாழக்கிழமை முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.

இந்த சந்திப்பு நாளைமுற்பகல் 11 மணிக்கு எதிர்கட்சி தலைவர் அலுவலகத்தில் இடம்பெறவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் பேராசிரியர் றோஹண லகஷ்மன் பியதாச தெரிவித்தார். 

இந்த சந்திப்பில் சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர, முன்னாள் பொதுச் செயலாளர் றோஹண லக்ஷ்மன் பியதாச மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால ஆகியோரும், பொது ஜன பெரமுன சார்பில் அந்த கட்சியின் தவிசாரளர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், டலஸ் அழகப் பெரும மற்றும் ஜகத் வெல்லவத்த ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளனர்.