(நா.தினுஷா) 

இலங்கைக்கான வெளிநாட்டு நேரடி முதலீடானது கடந்த 2015 ஆண்டிலிருந்து 34 சதவீதத்தால் அதிகரித்துள்ளது. அதனடிப்படையில் இவ்வாண்டு இறுதியில் இலங்கைக்கான வெளிநாட்டு நேரடி முதலீடு 3 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரிக்கும் என  அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். 

கடந்த வருடத்தில் மாத்திரம் வெளிநாட்டு நேரடி முதலீடு 1.8 பில்லியன் அமெரிக்க டொலர்களில் இருந்து 35 வீதத்தால் அதிகரித்துள்ளது. இந்த தொகையை 2015 ஆண்டிலிரந்து கணக்கிடும் போது இது வரையில் கிடைக்கப்பெற்றுள்ள மொத்த வெளிநாட்டு நேரடி முதலீடுகளின் மொத்த தொகை 5.8 பில்லின் அமெரிக்க டொலர்களாகும். இது 34 சதவீத அதிகரிப்பாகும் எனவும் குறிப்பிட்டார்.