வெலிக்கடைப் பகுதியில் ஆயுர்வேத சிகிச்சை நிலையம் எனும் போர்வையில் இயங்கிவந்த விபச்சார விடுதியொன்று சுற்றிவளைக்கப்பட்டு மூன்றுப் பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெலிக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, இராஜகிரியப் பகுதியில் வெலிக்கடை பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய, அலுத்கடை நீதவான் நீதிமன்றத்தினால் பெறப்பட்ட பிடியாணை உத்தரவுக்கமைய நேற்று இரவு 9. 55மணியளவில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின் போது முகாமையாளப் பெண் உட்பட இரு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மத்தியகண்டி , திஸ்ஸமஹாராம மற்றும் அலுத்கம ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 26 மற்றும் 22 வயதுகளையுடைய பெண்கள் இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெலிக்கடை பொலிஸார் குறித்த பெண்களை அலுத்கடை நீதவான் நீதிமன்றத்தில் அஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதுடன் , மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.