கிரிபத்கொட பகுதியில் ஜப்பானில் தயாரிக்கப்படும் 4 கோடி ரூபா பெறுமதியான சொகுசு ஜீப் வாகனத்துடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிரிபத்கொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, களனியில் அமைந்துள்ள  வீடொன்றில் நேற்று  பிற்பகல் 2.30 மணியளவில் சட்டவிரோதமாக உதிரிப்பாகங்களாக இந்நாட்டிற்கு எடுத்து வரப்பட்டு தயாரிக்கப்பட்டுள்ள, ஜப்பானில் தயாரிக்கப்படும் சொகுசு ஜீப் வாகனத்துடன் சந்தேக நபரொருவர் பாணந்துரை வலான ஊழல் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தெபிலிகஸ்முல்ல கிரிபத்கொட பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டள்ளார்.

இதனை தொடர்ந்து சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது, இவ்வாகனம் ஜப்பானில் திருடப்பட்டு உதிரிப்பாகங்களாக இந்நாட்டிற்கு எடுத்து வரப்பட்டுள்ளதாகவும், இதுவரையும் இவ்வாகனம் குறித்த பதிவுகள் எதுவும், வாகனத் திணைகளத்தில் பதியப்படவில்லை எனவும் தெரியவந்துள்ளது.

சந்தேக நபரை மஹர நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன் , மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.