சிவனொளிபாதலையில் ஏற்பட்ட பதற்ற நிலையை தொடர்ந்து ஹட்டன் பொலிஸ் மா அதிபர், மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் நல்லத்தண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோர் இணைந்து பொது கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளனர்.

இக்கூட்டத்தில், இவ்வாறு தவறான விடயத்தில் ஈடுபட்டோரை சிசிடிவி கெமராவின் உதவியுடன் கைது செய்யவுள்ளதாக பொலிஸார் அறிவித்தனர்.

அத்துடன் சிவனொளிபாதமலையில் இன மத பேதமின்றி அனைவருக்கும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.