ஜீவா நடிப்பில் உருவான கீ, அடுத்த மாதம் 12 ஆம் திகதியன்று வெளியாக இருப்பதாக அப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

சிம்பு நடித்த ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ பட தயாரிப்பின்போது ஏற்பட்ட நஷ்டத்தின் காரணமாக, தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனின் தயாரிப்பில் உருவான ‘கீ‘ வெளியாகாமல் முடங்கியது. இதைத் தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தற்பொழுது ‘கீ’ படம் வெளியாகவிருக்கிறது.

 இதில் ஜீவா, நிக்கி கல்ராணி, அனைகா சோட்டி,ஆர் ஜே பாலாஜி, மனோபாலா, சுகாசினி, மீரா கிருஷ்ணன், சிந்து ஷ்யாம் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு, விஷால் சந்திரசேகர் இசை அமைத்திருக்கிறார், கிரைம் திரில்லர் சோனரில் தயாரான இந்த படத்திற்கு திரைக்கதை அமைத்து இயக்கி இருக்கிறார் அறிமுக இயக்குநர் காலிஸ்.

இதனிடையே ஜீவா நடிப்பில் கொரில்லா, ஜிப்ஸி ஆகிய படங்கள் தயாராகி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.