போலி சாரதி அனுமதிப் பத்திரங்களை தயாரித்து வந்த ஒருவர் இராஜகிரிய பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

இராஜகிரிய மொரவிடியாவ பாதைப் பகுதியில் நேற்றிரவு 8.30 மணியளவில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் இவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் அவரிடமிருந்து 52 சாரதி அனுமதிப் பத்திரங்களும் மீட்க்கப்பட்டுள்ளன.

இராஜகிரிய பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய கிஹனகே பிரித்தி சாந்த எனப்படுபவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.