இலங்கை அணியின் நட்­சத்­திர சுழற்­பந்து வீச்­சா­ள­ரான முத்­தையா முர­ளி­தரன் தான் பெற்ற ஆட்ட நாயகன் விரு­து­களை 'குட்னஸ்' தொண்டு நிறு­வ­னத்­திற்கு வழங்­க­வுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

19 வய­தி­லி­ருந்து கிரிக்கெட் அரங்கில் தான் பெற்ற ஆட்ட நாயகன் விரு­துகள் அனைத்­தையும் வழங்­க­வுள்­ள­தா­கவே தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

இதன்­மூலம் சீனி­க­மவில் அமைந்­துள்ள 'குட்னஸ்' தொண்டு நிறு­வ­னத்தின் தலை­மை­ய­கத்தில் முத்­தையா முர­ளி­தரன் அருங்­காட்­சி­யகம் அமைக்­கப்­ப­ட­வுள்­ளது.

இதற்­கா­கவே தனது அனைத்து ஆட்­ட­நா­யகன் விரு­து­க­ளையும் முர­ளி­தரன் வழங்­க­வுள்ளார்.