அண்மையில் பல பிரச்சினைகளுக்கு மத்தியில் தமிழில் பெயர் மாற்றப்பட்ட சிவனொளி பாதமலையின் பெயர் பலகை நேற்றிரவு சில விசமிகளால் தமிழ், ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்த பெயர்கள் அளிக்கப்பட்டுள்ளது.

சிவனொளிபாதமலை என  தமிழில் பெயரிடப்பட்டிருந்த குறித்த பெயர் பலகை அண்மையில் சிங்கள மொழியில் பெயர் மாற்றப்பட்டது. இதனையடுத்து அங்கு ஏற்பட்ட பல பிரச்சினைகளுக்கு மத்தியில் மீண்டும் தமிழில் பெயர் மாற்றப்பட்டது.

இந்நிலையில் நேற்றிரவு புதிதாக தமிழில் அமைக்கப்பட்டிருந்த பெயர் பலகையில் எழுதியிருந்த தமிழ் மற்றும் ஆங்கிலப் பெயர்களை சில விசமிகளால் பாதை செப்பனிடும் தார் இட்டு அளிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக குறித்த பகுதியில் தற்போது பெரும் பதற்றமான சூழ்நிலை நிலவி வருவதாக  செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் குறித்த பகுதியில் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடதக்கது.