இலங்கை கடற்படை கப்பல் சாகர “ லீமா கண்காட்சி – 2019” இல் பங்கேற்பு!

Published By: Vishnu

20 Mar, 2019 | 10:21 AM
image

மலேசியா லங்காவி தீவில் நடைபெற இருக்கும் “லங்காவி சர்வதேச கடல்சார் மற்றும் வான்வெளி கண்காட்சி – 2019” நிகழ்வில் கலந்துகொள்வதற்காக இலங்கை கடற்படை கப்பல் சாகர நேற்று திருகோணமலை துறைமுகத்திலிருந்து தனது பயணத்தை ஆரம்பித்துள்ளது.

 

குறித்த கப்பலில் 180 கடற்படை வீரர்கள் சென்றுள்ளனர். இங்கு கடற்படை இசைகுழு நாட்டை விட்டு புறப்பட்ட இக்கப்பலுக்கு கடற்படை மரபுக்களுக்கமைய பிரியாவிடையளிக்கப்பட்டதுடன் இன் நிகழ்வுக்காக கிழக்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் சுமித் வீரசிங்க, கொடி அதிகாரி கடற்படை கொடி கட்டளை ரியர் அட்மிரல் ஆனந்த குருகே உட்பட சிரேஷ்ட அதிகாரிகள் கழந்துகொன்டனர்.

மேலும் இன் விஜயத்தின் போது கப்பலின் கட்டளை அதிகாரியாக கேப்டன் அநில் போவத்த நடவடிக்கைகள் மேற்கொள்கிரார்.

குறித்த கண்காட்சியானது ஆசியாவின் பசுபிக் பிராந்தியத்தில் ஈராண்டுகளுக்கொருமுறை நடைபெறுகின்ற மிகப்பெரிய கடல்சார் கண்காட்சியாகும். உலகம் பூராகவுமுள்ள நாடுகளிலிருந்து பாதுகாப்பு மற்றும் வனிகவியல் துறைகளுடன் தொடர்புடைய ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் பங்குபற்ற உள்ளனர். இந்த முறை இப் பயிற்சி மற்றும் கண்காட்சி 15 வது முறையாக நடைபெறும்.

மேலும், இக்கண்காட்சியானது இம்மாதம் 26 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு எதிவரும் 30 ஆம் திகதி நிறைவு பெறவுள்ளது. இக்கண்காட்சிக்கு கலாச்சார நிகழ்ச்சிகள், கப்பல்கள் கண்காட்சி, கடற்படை மற்றும் விமான ஒருங்கிணைந்த பயிற்சிகள் உட்பட பல சிறப்பு திட்டங்கள் நடத்தப்பட உள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44