155 ஆவது பொலிஸ் மாவீரர் தின நிகழ்வு நாளைய தினம்    பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜெயசுந்தரவின் தலைமையில் இடம் பெறவுள்ளது.  

இந்த நிகழ்வு மாவனெல்லை, சபான் நினைவுத்தூயில் காலை 7.15  மணியளவில் இடம்பெற்றவுள்ளது.

நாட்டிற்காக உயிர்த்தியாகம் செய்த பொலிஸ் அதிகாரிகள்  அனைவரையும் நினைவு கூறும் வகையிலேயே இந்த நிகழ்வு  ஏற்பாடு செய்யப்படவுள்ளது.  

இதன்போது நாட்டின் நீதிக்கானவும், சமாதானத்திற்காகவும், நல்லிணக்கத்திற்காகவும் தமது உயிரை தியாகம் செய்த பொலிஸ்  வீரரிகளின் குடும்பத்தினரும் இந்த நிகழ்வில் கலந்து  கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.