2030 ஆம் ஆண்டளவில் இலங்கையின் மின்வலு உற்பத்தி வலைப்பின்னலில் 60 சதவீதத்தை புதுப்பிக்கக்கூடிய மின்வலு தோற்றுவாய்கள் மூலம் மின்னுற்பத்தி செய்யக்கூடியதாக மாற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்காக சூரியசக்தி மறுமலர்ச்சி என்ற வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. இதன் கீழ் வவுனியா, வாழைச்சேனை உள்ளிட்ட ஐந்து இடங்களில் 28 சூரிய மின்சக்தித் திட்டங்கள் அமுலாக்கப்பட உள்ளன.  இதற்காக 28 முதலீட்டாளர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.