பிரேரணையை திருத்த முயற்சிப்பது   எமது மக்களுக்கு  பாதகமாகிவிடும் -  சுமந்திரன் எம்.பி.  கூறுகிறார் 

Published By: Priyatharshan

19 Mar, 2019 | 11:38 PM
image

ஜெனிவாவில் தற்போது பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளினால் கொண்டுவரப்பட்டுள்ள பிரேரணையை திருத்துவதற்கு  முற்பட்டால் அது இலங்கைக்கு சாதகமாக போய்விடும். அதனை பயன்படுத்தி இலங்கையும் திருத்தங்களை செய்துவிடும். அதனால் தான் நாங்கள் கேட்கும் திருத்தங்களை அவர்கள் கொண்டு வராமல் இருக்கிறனர் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். 

மனிதவுரிமை பேரவையின் கூட்ட.த்தொடரில் பங்கேற்க ஜெனிவா  வந்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் வீரகேசரிக்கு வழங்கிய விஷேட செவ்வியின் போதே இதனை தெரிவித்தார்.   

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

எந்த தீர்மானத்திலும் காலக்கெடு இலங்கைக்கு கொடுக்கப்பட்டிருக்கவில்லை. இவ்வளவு காலத்துக்குள்  இங்கே இந்த தீர்மானத்திலே இலங்கை தான் பொறுப்பெடுத்த விடயங்களை நிறைவேற்றுகின்ற போது அதனை மேற்பார்வை செய்வதற்கும் தொழில்நுட்ப உதவிகளை செய்வதற்கும்  உந்தி தள்ளுவதற்குமான  பொறிமுறை தான் இந்த தீர்மானம். ஆகவே தான் அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

இப்போது முன்வைத்திருக்கின்ற தீர்மான வரைபே எம்மை பொறுத்த வரையில் போதாது. இது இன்னமும் பலப்படுத்தப்பட வேண்டும் என்பது எமது நிலைப்பாடு. அதனை திருத்துவதற்கான பிரேரணையை கொண்டு வந்தால் அது இலங்கைக்கு சாதகமாக போய்விடும். அதனை பயன்படுத்தி இலங்கையும் திருத்தங்களை செய்துவிடும். அதனால் தான் நாங்கள் கேட்கும் திருத்தங்களை அவர்கள் கொண்டு வராமல் இருக்கிறது.

பத்து வருடங்களாக நாம் சொல்லிவருகின்ற ஒரு கூற்று உண்மை கண்டறியப்படவேண்டும் என்பதாகும். அந்த உண்மையின் அடிப்படையிலேயே நீதி செய்யப்படவேண்டும் எனத் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58