சிவகார்த்திகேயன் தயாரிக்கும் இரண்டாவது படத்திற்கு ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா ’ என்று பெயரிடப்பட்டிருக்கிறது.

‘கனா’ என்ற படத்தைத் தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ என்ற படத்தை தயாரித்திருக்கிறார். இதில் தொலைக்காட்சி நடிகர் ரியோ ராஜ் கதையின் நாயகனாக அறிமுகமாகிறார். 

அவருக்கு ஜோடியாக புதுமுக நடிகை ஸ்ரீன் காஞ்ச்வாலா நடிக்கிறார். இவர்களுடன் யூட்யூப் புகழ் விக்னேஷ்காந்த் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.  சபீர் இசை அமைக்க, யுகே செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். கொமடி மற்றும் சென்டிமெண்ட் கலந்த இந்த படத்தை அறிமுக இயக்குனர் கார்த்திக் வேணுகோபாலன் திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவுற்றது. தொடர்ந்து இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. 

‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா ’என்று தலைப்பை மட்டும் வெளியிட்டுள்ள படக்குழுவினர், விரைவில் இப்படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியீடு இருக்கும் என்று தெரிவித்திருக்கிறார்கள்.