(ஜெனிவாவிலிருந்து எஸ். ஸ்ரீகஜன்)

இலங்கை விவகாரம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு கொண்டுசெல்லப்பட வேண்டும் என்ற  கோரிக்கை உள்ளிட்ட மூன்று  விடயங்கள் உள்ளடங்கிய ஆறு தமிழ் கட்சிகளினால்  கைச்சாத்திடப்பட்ட  மகஜர் இன்று ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 

இலங்கை விவகாரம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு கொண்டுசெல்லப்படவேண்டும் சர்வதேச தீர்ப்பாயம் ஒன்று நியமிக்கப்படவேண்டும் 30 -1 மற்றும் 34- 1 ஆகிய தீர்மானங்கள் அமுல்ப்படுத்தப்படுவதை கண்காணிக்க ஐ.நா. ஆணையாளர் ஒருவர் நியமிக்கப்படுவதுடன் அவர் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை  பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கவேண்டும் என்று  இந்த மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.