(ஜெனிவாவிலிருந்து எஸ். ஸ்ரீகஜன்)

இலங்கை தொடர்பாக பிரிட்டன், ஜேர்மன் ஆகிய நாடுகளினால் ஜெனிவா மனித உரிமை பேரவையில் முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணையை திருத்துவதற்கான முயற்சிகளை ஜெனிவாவில் களமிறங்கியுள்ள   அரச தரப்பு பிரதிநிதிகள் முன்னெடுத்துள்ளனர். 

ஜெனிவா வந்துள்ள அரச தரப்பு பிரதிநிதிகளான  வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன   பாராளுமன்ற உறுப்பினர் சரத் அமுனுகம வடக்கு ஆளுநர்  சுரேன் ராகவன் மற்றும் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரவிநாத ஆரியசிங்க  ஆகியோர்   இன்று சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகளுக்கு  விருந்துபசாரம் ஒன்றை வழங்கினர்.