சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் இன்று கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டனர். 

கொழும்பு கோட்டையில் இருந்து பேரணியாகச் சென்ற  பல்கலைக்கழக மாணவர்கள் கொழும்பு வாட் பிளேசில் உள்ள பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். 

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் சமூக விஞ்ஞானம் மற்றும் மொழிகள் பீடத்திற்கு மாணவர்களை சேர்த்துக்கொள்வதில் உள்ள குறைப்பாட்டை நிவர்த்தி செய்யக்கோரியே மேற்படி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

இதன்போது ஆர்ப்பாட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக பொலிஸாரால் மாணவர்கள் மீது நீர்தாரை மற்றும் கண்ணீர் புகை பிரயோகம்  மேற்கொள்ளப்பட்டது. இதனால் இரு மாணவர்கள் காயமடைந்து கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.