வடமேல் கடற்படையினரால் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுப்பட்ட சந்தேக நபர்கள் மூன்றுப் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

வடமேல் கடற்படையினரால் கற்பிட்டி - பல்லியவத்தைப் பகுதியில் நேற்று திங்கட்கிழமை மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்பு நடவடிக்கைகளின் போது அனுமதிப் பத்திரமின்றி சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுப்பட்ட சந்தேக நபர்கள் மூன்றுப் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனை தொடர்ந்து அவர்களிடமிருந்து மீன்பிடி படகு ஒன்றும் , 100 மீட்டர் நீளமான தடைச் செய்யப்பட்ட  மீன்பிடி வலை , மீன்பிடித்தலுக்காக பயன்படுத்தும் இயந்திரங்கள் மற்றும் சட்டவிதோதமாக பிடிக்கப்பட்ட 10 கிலோ கிரேம் மீன்கள்  கடற்படையினரால் மீட்க்கப்பட்டுள்ளன..

கற்பிட்டி பகுதியைச் சேர்ந்த மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன். சந்தேக நபர்களை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் கடற்தொழில் பரிசோதனை நிலையத்திற்கு ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை கடற்படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

கடற்படையினரால் மீட்க்கப்பட்ட சட்டவிரோதமான மீன்பிடித்தலுக்காக பயன்படுத்திய உபகரணங்கள் மற்றும் மீன்களையும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் கடற்தொழில் பரிசோதனை நிலையத்திற்கு ஒப்படைப்பதள்கான நடவடிக்கைகளையும் முன்னெடுத்து  வருகின்றனர்.