(எம்.எப்.எம்.பஸீர்)

தான் அமைச்சராக பதவி வகித்த 2011 முதல் 2014 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் சொத்து பொறுப்புக்களை வெளிப்படுத்தவில்லை என குற்றம் சுமத்தி முன்னாள் அமைச்சரும் குருனாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு எதிராக தாக்கல் செய்யப்ப்ட்டிருந்த நான்கு வழக்குகளில் இருந்து அவர் நேற்று விடுவிக்கப்பட்டார். 

ஏற்கனவே இதனையொத்த வழக்கொன்றிலிருந்து அவர்  நிரபராதி என விடுவிக்கப்பட்டிருந்த நிலையிலேயே, வழக்குத் தாக்கல் செய்த இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக் குழு, குறித்த நான்கு வழக்குகளையும் வாபஸ் பெறுவதாக அறிவித்த நிலையிலேயே கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை விடுதலை செய்தது.