இனி­வரும் அனைத்து விதமான போட்­டி­க­ளுக்கும் இலங்கை அணிக்கு ஒரு தலைவர் முறைமை கடைப்­பி­டிக்­கப்­ப­டவுள்­ளது.

அதே­நேரம் தலை­வராக அஞ்­சலோ மெத்­தி­யூ­ஸும் உப தலை­வ­ராக தினேஷ் சந்­தி­மாலும் நீடிப்பர் என இலங்கைக் கிரிக்கெட் நிறு­வ­னத்தின் தலைவர் திலங்க சும­தி­பால தெரி­வித்தார்.

இது­கு­றித்து அவர் மேலும் தெரி­விக்­கையில்,

டெஸ்ட், ஒருநாள் மற்றும் இரு­ப­துக்கு 20 என 3 வகை­யான போட்­டி­க­ளிலும் இனி ஒரே தலைவர் தான் செயற்­ப­டு வார். இதுதான் எமக்கு சரி­யாக இருக்கும் என்று நம்­பு­கிறேன்.

இலங்கை அணியின் தலைவர் மற்றும் உப தலை­வர்­களை எடுத்து பார்த்தால் அவர்­க­ளிடம் சிறந்­த­வொரு இணைப்பை நாம் காணலாம். துலிப்மெண்டிஸ் – ரோய் டயஸ், அர்ஜுன ரண­துங்க – அர­விந்த டி சில்வா, சனத் – மாவன், மஹேல – சங்கா இந்த ஜோடிகள் அணிக்கு சிறந்த பெறு­பே­று­களைப் பெற்­றுக்­கொ­டுத்­துள்­ளன.

அதேபோல் அஞ்­சலோ மற் றும் சந்­திமால் ஆகி­யோரும் சிறந்த ஜோடிதான். அதனால் ஒவ்­வொரு வகை போட்­டி­க­ளுக்கும் இந்த ஜோடியைப் பிரிக்காமல் தொடர்ந்து அனைத்து வித­மான போட்­டி­களுக்கும் ஒரேதலைவரை நியமிக்க எதிர் பார்த்துள்ளோம் என்று திலங்க சுமதிபால தெரிவித்தார்.