(ஜெனிவாவிலிருந்து எஸ். ஸ்ரீகஜன்) 

பாதிக்கப்பட்ட மக்களின் விவகாரம் இம்முறை ஜெனிவா மனித உரிமை பேரவையில் தீர்க்கமான கட்டத்தை அடைந்துள்ள நிலையில் தமிழ் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து ஒரு அணியாக செயற்படுவதற்கு இணக்கம் கண்டுள்ளனர். 

அந்தவகையில்  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு  டெலோ  மற்றும்  தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் தற்போது ஜெனிவாவில்  களமிறங்கி பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதி தொடர்பில் சர்வதேச சமூகத்தை  தெளிவுபடுத்திவருகின்றனர். 

இந்த நிலையிலேயே ஜெனிவா விவகாரத்தில் தமிழ் கட்சிகள் பிரிந்து நின்று செயற்படாமல் ஒற்றுமையாக செயற்படவேண்டும் என்ற இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளனர்.