(ஜெனிவாவிலிருந்து எஸ். ஸ்ரீகஜன்)
ஜெனிவாவில் களமிறங்கியுள்ள அரச தரப்பு பிரதிநிதிகள் இலங்கை குறித்த பிரேரணையை திருத்துவதற்கு முயற்சித்துவருகின்ற நிலையில் இன்று ஜெனிவாவிலிருந்து பிரதமர் ரணிலுடன் தொலைபேசியில் தொடர்புகொண்ட எம். ஏ. சுமந்திரன் பிரேரணையை திருத்த இடமளிக்க முடியாது என்று குறிபபிட்டுள்ளார்.

இதனையடுத்து ஜெனிவாவில் உள்ள வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பனவுடன் தொடர்புகொண்ட பிரதமர் ரணில் இந்த விடயம் குறித்து பேசிய பின்னர் ஜெனிவா வளாகத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனை சந்தித்த வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன தாங்கள் பிரேரணையில் திருத்தத்தை கோரவில்லை என்று குறிப்பிட்டார்.