இலங்கையில் தமிழர்களிற்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டவர்களிற்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணைகளை நடத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் அதிமுக தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவித்துள்ளது

இந்திய நாடாளுமன்ற தேர்தலிற்கான அதிமுகவின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று வெளியாகியுள்ளது.

துணைமுதல்வர் பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபனத்தில் ஈழத்தமிழருக்கு உரிய நீதி கிடைக்கவும் அவர்தம் உரிமைகள் நிலைநாட்டப்படவும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அதிமுக தெரிவித்துள்ளது

இலங்கையில் தமிழ் மக்களிற்கு எதிரான கொடுரச்செயல்களில் ஈடுபட்டவர்கள் மீதும் அவர்களிற்கு உடந்தையாகயிருந்தவர்கள் மீதும் ஹேக் நகரில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டு ஈழத்தில் நடைபெற்ற  துயரங்களின் பின்னணியில்  மறைந்திருக்கும் அனைத்து உண்மைகளையும் வெளிக்கொணர நடவடிக்கை எடுக்கப்படும் என  அதிமுக தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில்  தெரிவித்துள்ளது.

இதேவேளை கச்சதீவினை மீட்டு தமிழக மீனவர்களின் பாராம்பரிய உரிமைகளை நிலைநாட்டிட நாடாளுமன்றத்தின் ஒப்புதலோடு அரசமைப்பில் சட்டம் கொண்டுவரப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிமுக தெரிவித்துள்ளது.