(இராஜதுரை ஹஷான்)

மனித உரிமை பேரவையில்  தமிழ் மக்கள் தொடர்பில் இன்று   பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அதிக அக்கறை  செலுத்தி வருகின்றார். இச்செயற்பாடுகள் போலி நாடகமாகும் என பாராளுமன்ற உறுப்பினர் சந்திரசேன தெரிவித்தார்.

யுத்த காலத்தில் சுமந்திரன், சம்பந்தன் ஆகியோர்  பாதிக்கப்பட்ட மக்களுக்கு எவ்வித நிவாரணங்களையும் , ஆதரவையும் வழங்க முன்வரவில்லை  இவர்கள் பாதுகாப்பாகவே இருந்தார்கள் . 

அரசாங்கமே அன்று அனைத்து விதமான உதவிகளையும் தமிழ் மக்களுக்கு செயற்படுத்திக் கொடுத்தது. ஆனால் இன்று இவர்கள் இராணுவத்தினருக்கு எதிராக  செயற்படுகின்றமையானது  பயனற்றதாகும் என்றார்.

பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாயலத்தில் நேற்று  செவ்வாய்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர்  சந்திப்பில்  கலந்துக் கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர குறிப்பிடும் கருத்துக்கள் முற்றிலும் தவறானவையாகும். எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமைத்துவத்திலே அடுத்த அரசாங்கம் உருவாக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.