பொலன்னறுவையில் சுற்றுலா வீசாவில் தங்கியிருந்து வியாபாரத்தில் ஈடுப்பட்ட ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

பொலன்னறுவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கதுருவெலப் பகுதியில் நேற்று பிற்பகல் 1.30 மணியளவில் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின் போதே, குடிவரவு குடியகல்வு சட்டத்திற்கு புறம்பாக இந்நாட்டில் தங்கியிருந்து வியாபாரத்தில் ஈடுப்பட்ட  20 வயதுடைய இந்தியப் பிரஜையொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதையடுத்து பொலிஸார் சந்தேக நபரை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.