(ஜெனிவாவிலிருந்து எஸ். ஸ்ரீகஜன்)

ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பில் சமர்ப்பிக்கப்படவுள்ள பிரேரணைக்கு புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. 

புதிய பிரேரணையானது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை வழங்கப்போவதில்லை. இதனால் ஐ.நா.  ஆணையாளரின் அறிக்கையில் உள்ளதைப்போன்று மாற்று வழிமுறைகள் கையாளப்பட வேண்டும். சர்வதேச விசாரணை இடம்பெறவேண்டும் என்று அந்த அமைப்புகளின் பிரதிநிதிகள் வலியுறுத்தினர். 

இது குறித்து ஐ.நா மனித உரிமைப் பேரவையின் 40 ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக ஜெனீவா வந்துள்ள புலம்பெயர் தமிழர் அமைப்புகளின் பிரதிநிதிகளான ரவிக்குமார் (பிரித்தானிய தமிழர் பேரவையின் செயலாளர் ), மாணிக்கவாசகர் (நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சர்), திருச்சோதி (அனைத்துலக ஈழத்தமிழர் பேரவையின் தலைவர்) ஆகியோரே இலங்கை தொடர்பில் சமர்ப்பிக்கப்படவுள்ள பிரேரணைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.