இன்டியன்வெல்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டியில் ஆஸ்திரிய வீரர் டொமினிக் திம், பெடரரை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளார்.

இன்டியன்வெல்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்தது. 

இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் 20 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வெற்றிகொண்ட சுவிட்சர்லாந்து வீரரான 37 வயதான ரோஜர் பெடரரும்  ஆஸ்திரியாவை சேர்ந்த 25 வயதான டொமினிக் திம்மை எதிர்கொண்டார்.

சுமார் 2 மணி நேரம் நடந்த இந்த ஆட்டத்தின் முடிவில் டொமினிக் திம் 3-6, 6-3, 7-5 என்ற செட் கணக்கில் ரோஜர் பெடரரை வீழ்த்தி முதல்முறையாக இந்த போட்டியில் சாம்பியன் பட்டத்தை தனதாக்கினார். 

அத்துடன் சமீபத்தில் 100-வது பட்டத்தை வென்று சாதித்து இருந்த பெடரர் 6 ஆவது முறையாக இந்த பட்டத்தை வெல்லும் வாய்ப்பை நழுவ விட்டார்.

இதேவேளை பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த இறுதிப்போட்டியில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான ஜெர்மனியைச் சேர்ந்த ஏஞ்சலிக் கெர்பர், கனடா வீராங்கனை பியான்கா ஆன்ட்ரீஸ்குவை சந்தித்தார்.

பரபரப்பாக அரங்கேறிய இந்த ஆட்டத்தில் பியான்கா ஆன்ட்ரீஸ்கு 6-4, 3-6, 6-4 என்ற செட் கணக்கில் ஏஞ்சலிக் கெர்பருக்கு அதிர்ச்சி அளித்து முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை சொந்தமாக்கினார். 

இதன் மூலம் இன்டியன்வெல்ஸ் பட்டத்தை வென்ற முதல் வைல்டு கார்டு வீராங்கனை மற்றும் 2-வது இளம் வீராங்கனை என்ற பெருமையை பியான்கா ஆன்ட்ரீஸ்கு பெற்றார்.