இலங்கை இராணுவம்  மனித உரிமை மீறல்கள் குறித்த விசாரணைகளை எதிர்கொள்வதற்கு தயாராகவுள்ளது என அதன் தளபதி மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.

படையினரை பாதுகாப்பதற்காக எந்த விதமான விசாரணைகளையும் எதிர்கொள்ளதயார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்

நாங்கள் குற்றமிழைக்கவில்லை இதனால் நாங்கள் எந்த விசாரணை குறித்தும் அஞ்சவில்லை  என அவர் தெரிவித்துள்ளார்

யுத்தமென்றால் உயிரிழப்புகள் ஏற்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்

இது கசப்பான உண்மை,உயிரிழப்புகள் இன்றி யுத்தத்தை முன்னெடுக்க முடியாது எனவும் குறிப்பிட்டுள்ள மகேஸ் சேனநாயக்க ஆனால் நாங்கள் உயிரிழப்புகளை ஏற்படுத்தினோம் என்பது இதன் அர்த்தமல்ல  எனவும் தெரிவித்துள்ளார்

கடந்த காலத்தை கிளறவேண்டாம்  கடந்த பத்து வருடங்களில் நாங்கள் செய்த சாதகமான விடயங்களை கருத்திலெடுங்கள் எனவும் இலங்கையின் இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.

சர்வதேச விசாரணை அவசியமில்லை என தெரிவித்துள்ள இராணுவதளபதி விசாரணைகளை முன்னெடு;ப்பதற்கான திறன் எங்கள் நீதித்துறையினரிடம் உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.