காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கிழக்கு மாகாணத்தில் இன்று முன்னெடுக்கப்படும் ஹர்த்தாலை முன்னிட்டு யாழ் மாவட்டத்திலும் ஆதரவு தெரிவிக்கப்பட்டு வருகிறது

அந்த வகையில் யாழ். திருநெல்வேலி வர்த்தர்கள் ஆதரவு  தெரிவித்து கடைகளை மூடியுள்ளனர்.

காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளைத் தேடிதரக் கோரி கவனஈர்ப்பு போராட்டம் ஒன்று கடந்த சனிக்கிழமை வடக்கிலும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

திருநெல்வேலி 

சாவகச்சேரி 

 வாழைச்சேனை,வாகரை,கிரான், செங்கலடி கல்குடா தொகுதியிலுள்ள பாடசாலைகளில் மாணவர்களின் வரவு குறைவினால் பாடசாலைகள் இயங்கவில்லை.

அரச அலுவலகங்கள் பொதுமக்களின் வரவின்மையால் இயங்கவில்லை, பிரதேசத்தின் கடைகள் அனைத்தும் பூட்டப்பட்டு காணப்படுகிறது.

வியாபார நடவடிக்கைகள் இடம்பெறவில்லை.போக்குவரத்து  இடம்பெறாத நிலையில் மக்களின் இயல்பு நிலமை பாதிப்படைந்து காணப்படுகிறது.