தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று ஆரம்பாகவுள்ளது.

இன்று ஆரம்பாகும் வேட்பு மனுத்தாக்கலானது எதிர்வரும் 26 ஆம் திகதி வரை இடம்பெறும்.

இந்தியா முழுவதும் உள்ள 543 பாராளுமன்றத் தொகுதிகளுக்கும் 7 கட்டங்களாக தேர்தல் நடக்கவுள்ளது. 

முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 11 ஆம் திகதியும், தமிழகம் மற்றும் புதுச்சேரயில் இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 18 ஆம் திகதியும் தேர்தல் நடக்கிறது.