நாட்டின் பல பிரதேசங்களில் ஏற்பட்ட மின்வெட்டு இன்று நண்பகலுக்குள் சீராக்கப்பட்டுவிடும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

நுரைச்சோலை அனல்மின் நிலைய மின்பிறப்பாக்கி ஒன்று முடங்கியதால் சில இடங்களில் மின்விநியோகத்தைத் துண்டிக்க நேர்ந்ததாக சபையின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்த்தன தெரிவித்தார். 

ஒவ்வொன்றும் 300 மெகாவொட் மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடிய மூன்று மின்பிறப்பாக்கிகள் நுரைச்சோலையில் இயங்குகின்றன. இரண்டாவது மின்பிறப்பாக்கி நேற்று பழுதடைந்தது. இதனைத் திருத்தியமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜயவர்த்தன குறிப்பிட்டார்.