நெதர்லாந்தின் உட்ரெச்ட் நகரில டிராமில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகம் தொடர்பில் தேடப்பட்டுவந்த துருக்கியை சேர்ந்த சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

டிராம் தாக்குதல் இடம்பெற்ற பகுதியிலிருந்து  3கிலோமீற்றர் தொலைவில் உள்ள பகுதியில் உள்ள கட்டிடமொன்றில் சந்தேகநபரான 37 வயது துருக்கி பிரஜை கைதுசெய்யப்பட்டுள்ளார்.

துப்பாக்கி பிரயோகத்திற்கு பின்னர் தேடுதல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்திய பயங்கரவாத தடுப்பு பிரிவினர் வீதிரோந்துகளையும் மேற்கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் தாக்குதல் இடம்பெற்ற பகுதியிலிருந்து சில கிலோமீற்றர் தொலைவில் உள்ள வீட்டை சுற்றிவளைத்த  பயங்கரவாத தடுப்பு பிரிவினர் சந்தேகநபரை கைதுசெய்துள்ளனர்

துப்பாக்கி பிரயோகத்திற்கு  பயங்கரவாத நோக்கம் காரணமாகயிருக்கலாம் என அதிகாரிகள் முன்னர் தெரிவித்திருந்த போதிலும் அதிகாரியொருவர் செய்தியாளர் மாநாட்டில் குடும்பதகராறே இதற்கு காரணம் என குறிப்பிட்டுள்ளார்.

நெதர்லாந்து காவல்துறையினருக்கு அந்த நபரை முன்னரே தெரியும்  எனவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

இதேவேளை சந்தேகநபர் செச்னியாவில் மோதலில் ஈடுபட்டவர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவர் ஜஎஸ் அமைப்புடன் உள்ள தொடர்புகளிற்காக கைதுசெய்யப்பட்டு பின்னர் விடுதலையானவர் என நெதர்லாந்தின் வர்த்தகர் ஒருவர் பிபிசிக்கு தெரிவித்துள்ளார்.